/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உழவர் மன்றத்தில் ஆலோசனை விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
/
உழவர் மன்றத்தில் ஆலோசனை விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
உழவர் மன்றத்தில் ஆலோசனை விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
உழவர் மன்றத்தில் ஆலோசனை விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
ADDED : ஏப் 30, 2025 01:09 AM
நாமகிரிப்பேட்டை, ஏப். 30
நாமகிரிப்பேட்டை உழவர் மன்றத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள, விசவாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து விவசாய கூட்டமைப்பு சார்பில், நாளை காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை, நாமகிரிப்பேட்டை உழவர் மன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் ஒன்று சேர்ந்து, நாமக்கல்லில் பேரணி நடத்துவது; விவசாயத்திற்கு, 100 நாள் வேலையை பயன்படுத்துவது; மரவள்ளி உணவு திருவிழா நடத்துவது; விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது; அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கையகப்படுத்துவதை உடனடியாக ரத்து செய்ய கோருவது.
நெல்லுக்கு போதுமான விலை நிர்ணயிக்க வலியுறுத்துவது; தென்னை, பனை மரத்தில் இருந்து கள் இறக்க தடையை நீக்க வலியுறுத்துவது; விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்துவதை ரத்து செய்ய வலியுறுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதில், அனைத்து விவசாய சங்க தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

