/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சின்னமணலி பிரிவில் கும்மிருட்டால் அச்சம்
/
சின்னமணலி பிரிவில் கும்மிருட்டால் அச்சம்
ADDED : செப் 23, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், சின்னமணலி குளத்துபாளையம் பிரிவுசாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுவரை இப்பகுதியில் மிவிளக்குகள் ஏதும் அமைக்கவில்லை.
இதனால், இரவில் கும்மிருட்டு நிலவி வருவதால், பணிமுடிந்து செல்லும் பெண்கள், மாலைநேர வகுப்பு முடிந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, பிரிவு சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.