ADDED : ஜூலை 16, 2026 04:16 AM
எருமப்பட்டி:எருமப்பட்டி
யூனியன், வரகூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 700க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பழமைவாய்ந்த
இப்பள்ளியை சுற்றி, 50 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர்
கட்டப்பட்டது. இந்த சுற்றுச்சுவர், கருங்கற்களை கொண்டு, மண்ணை பூசி
கட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், இந்த சுற்றுச்சுவரில்
சிறிது விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை கண்டுகொள்ளாமல் விட்டதால்,
சில வாரங்களுக்கு முன் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, பள்ளி
வளாகத்தில் மாணவர்கள் யாரும் இல்லாததால், விபத்து
தவிர்க்கப்பட்டது.மேலும், பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த பகுதியில்
மழை பெய்தால், மண் அரிப்பு ஏற்பட்டு மீண்டும் சுவர் இடிந்து விழும் அபாயம்
உள்ளது. எனவே, பள்ளிக் கல்வித்துறையினர் மாணவர்களின் பாதுகாப்பு
கருதி, இடிந்து விழுந்த சுற்றுசுவரை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
