ADDED : ஜூலை 16, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
எலச்சிபாளையம்:பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்
சார்பில், வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், காலியாக உள்ள கூடுதல்
இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு
பதவி உயர்வை, தமிழக அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி நேற்று, அனைத்து
வட்டார தலைநகரங்களிலும், மாநிலம் தழுவிய வட்டார தலைநகர்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி
அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர்
பாலவிநாயகம் தலைமை வகித்தார். இதில், கோரிக்கையை வலியுறுத்தி கோஷம்
எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
