/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கூட்டமைப்பினர் கோரிக்கை
/
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கூட்டமைப்பினர் கோரிக்கை
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கூட்டமைப்பினர் கோரிக்கை
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கூட்டமைப்பினர் கோரிக்கை
ADDED : டிச 21, 2024 01:12 AM
நாமக்கல், டிச. 21-
'பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
'100 நாளில் பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை பகுதிநேர ஆசிரியர்கள் நம்பி இருந்தனர். ஆனால், 42 மாதங்கள் அதாவது மூன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பும், சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்யவில்லை என்பதால் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், கடைசியாக 2021, பிப்.,ல், 10,000 ரூபாய் சம்பளம் பெற்று வந்தனர். அவர்களிடம், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நிரந்தரம் செய்வோம்' என, 'உங்கள் தொகுதி ஸ்டாலின்' நிகழ்ச்சி மூலம், நேரில் பகுதிநேர ஆசிரியர்களிடம் தர்மபுரியில், இந்த வாக்குறுதியை கொடுத்து உரையாடினார்.
ஆனாலும், முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது குறித்து இதுவரை நேரடியாக பதில் சொல்லவில்லை. அதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து பல போராட்டங்களுக்கு பின்பே, 2004, ஜன.,ல், முதல் முறையாக சம்பள உயர்வு, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனாலும், இந்த 2,500 ரூபாய் சம்பள உயர்வை, ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் கிடைத்த 10,000 ரூபாய் சம்பளத்துடன் சேர்த்து, மொத்த சம்பளமாக, 12,500 ரூபாயாக வழங்காமல், தனித்தனியாக பட்டுவாடா செய்வதால் கவலை அடைந்து வருகின்றனர்.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தி வந்த இந்த கோரிக்கையை, தற்போது, மற்ற கட்சிகள் அனைத்தும் சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆகவே, 15 ஆண்டுகளாக தற்காலிகமாக பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்லி பாடத்தில், 3,700 பேர். ஓவியம் பாடத்தில், 3,700, கணினி அறிவியல், 2,000, தையல் பாடம், 1,700, இசை, 300, தோட்டக்கலை, 20, கட்டிடக்கலை, 60, வாழ்வியல் நிறம் பாடத்தில், 200 என, மொத்தம், 12,000 பேரையும், இனியும் தாமதம் செய்யாமல் முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.