ADDED : டிச 03, 2025 07:57 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டாரத்தில், வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும், 'அட்மா' திட்டத்தின் கீழ், கூத்தாநத்தம் கிராமத்தில், நேற்று, நன்னெறி வேளாண்மை உத்திகள் என்ற தலைப்பில், உளுந்து பயிரில் பண்ணைப்பள்ளியின் வயல் தினவிழா, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் நடந்தது. அவர் வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்; நன்னெறி வேளாண்மை உத்திகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சார்ந்த நன்மைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
உதவி வேளாண்மை இயக்குனர் சித்திரைச்செல்வி, காவேரி கூக்குரல் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆகியோர், தொழில்நுட்பங்களை பற்றி விளக்கமளித்தார். நிகழ்ச்சியில், 25 விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சியின் முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலையரசி நன்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மைதிலி, சரண்யா மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

