/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
/
பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
ADDED : டிச 03, 2025 07:58 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மெட்டாலா அடுத்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, நேற்று நடந்தது.
சேலம் பெரியார் பல்கலையின், ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் இளங்கோவன் தங்கவேல், 'மாணவர்களின் சிந்தனையில் தோன்றும் எண்ணங்களே சாதனைகளுக்கு வழிகாட்டும்' என்றார். இந்த அறிவியல் கண்காட்சியில், 25க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, 200 செயல் முறை வடிவங்களையும், 200 அறிவியல் மாதிரிகளையும் காட்சிப்படுத்தினர். வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு சுழற்கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

