/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'அட்மா' திட்டம் சார்பில் வள்ளிபுரத்தில் வயல் விழா, கிசான் கோஸ்தீஸ் திட்ட பயிற்சி நாமக்கல், டிச. 29- நாமக்கல் ஒன்றியம், வள்ளிபுரம் கிராமத்தில், வேளாண் துறை மூலம் செயல்படும், 'அட்மா' திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் ஆராய்ச்சி விரிவாக்கம், வயல் தினவிழா மற்றும் கிசான் கோஸ்தீஸ் திட்ட பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தலைமை வகித்து, மக்

ADDED : டிச 29, 2024 01:30 AM
'அட்மா' திட்டம் சார்பில் வள்ளிபுரத்தில்
வயல் விழா, கிசான் கோஸ்தீஸ் திட்ட பயிற்சி
நாமக்கல், டிச. 29-
நாமக்கல் ஒன்றியம், வள்ளிபுரம் கிராமத்தில், வேளாண் துறை மூலம் செயல்படும், 'அட்மா' திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் ஆராய்ச்சி விரிவாக்கம், வயல் தினவிழா மற்றும் கிசான் கோஸ்தீஸ் திட்ட பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தலைமை வகித்து, மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலின் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் முறைகள், கடைப்பிடிக்க வேண்டிய விதை தேர்வு, மண் பரிசோதனையின்படி உரமிடல் பயிர் சுழற்சி, கோடை உழவு, பொருளாதார சேதார நிலையை பார்த்து பூச்சிக்கொல்லி, பூஞ்சான கொல்லி பயன்படுத்துதல், நீர் மேலாண், அறுவடை பின்செய் நேர்த்தி போன்ற காரணிகளை பயன்படுத்தி குறைந்த வேலையாட்கள், குறைந்த முதலீடு அதிக மகசூல், அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகளை கூறினார்.
கோவை வேளாண் பல்கலை மண்ணியியல் துறையின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி அப்பாவு, துணை வேளாண் அலுவலர் (ஓய்வு) வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்று, மண் வகைகள், மண் வளம் குன்றுவதற்கான காரணங்கள், குறைந்த மண்ணின் ஈரப்பதம், களர் மற்றும் உவர் தன்மை மேல் மண், அடிமண் இறுக்கம் குறித்து எடுத்துரைத்தனர். வேளாண் அலுவலர் காஞ்சனா, உதவி வேளாண் அலுவலர்கள் சதீஸ்குமார், மாலதி ஆகியோர் வேளாண் திட்டங்கள், பயிர் சாகுபடி பரப்பை பதிவு செய்தல், பயிர் காப்பீடு திட்டம் பற்றி விளக்கினர்.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கவிசங்கர், ஹரிஹரன் ஆகியோர், மக்காச்சோளம் விதை நேர்த்தி, மண்மாதிரி செயல் விளக்கம், நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், அறுவடை பின்செய் நேர்த்தி குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.