/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் தாய் காலமானார்
/
நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் தாய் காலமானார்
ADDED : செப் 21, 2023 07:56 AM
நாமக்கல் : நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சேலம் சாலையில் உள்ள, என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் உதயச்சந்திரன். ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், தற்போது, சென்னையில், தமிழக அரசின் நிதித்துறை செயலர் மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை செயலராக பதவி வகிக்கிறார்.
நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்த அவரது தாய் லீலாவதி, 72, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்; நேற்று, சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற உதயச்சந்திரன், அவரது தாய் இறப்பு செய்தியறிந்து, நாமக்கல்லுக்கு வந்தார்.