/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., நிர்வாகிகளின் 739 குடும்பத்துக்கு நிதியுதவி
/
தி.மு.க., நிர்வாகிகளின் 739 குடும்பத்துக்கு நிதியுதவி
தி.மு.க., நிர்வாகிகளின் 739 குடும்பத்துக்கு நிதியுதவி
தி.மு.க., நிர்வாகிகளின் 739 குடும்பத்துக்கு நிதியுதவி
ADDED : நவ 21, 2025 01:53 AM
ராசிபுரம், ராசிபுரத்தில் மறைந்த, தி.மு.க., நிர்வாகிகள் குடும்பங்களுக்கு நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கிழக்கு மாவட்ட செயலர் ராஜேஸ்குமார் பேசியதாவது:
ராசிபுரம் நகரம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு, நாமக்கல், புதுச்சத்திரம் வடக்கு தெற்கு, மோகனுார், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்கள், நாமகிரிப்பேட்டை பேரூர், ஆர்.புதுப்பட்டி பேரூர், சீராப்பள்ளி பேரூர், பட்டணம் பேரூர், பிள்ளாநல்லுார் பேரூர் மற்றும் மோகனுார் பேரூரில் கடந்த செப்., 2024 முதல் அக்., 2025 வரை மறைந்த, 739 கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்கள் குடும்பத்திற்கு கலைஞர் குடும்ப நலநிதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து ராசிபுரம் ஒன்றியத்தில் மறைந்த, 47 உறுப்பினர்கள், பட்டணம் பேரூரில், 11 பேர், பிள்ளாநல்லுார் பேரூரில், 25 உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பங்களுக்கு நிதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், நகர செயலர் சங்கர், ஒன்றிய செயலர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

