/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரிக்கரை, குட்டை பகுதியில் பனை விதை நடவு
/
ஏரிக்கரை, குட்டை பகுதியில் பனை விதை நடவு
ADDED : நவ 21, 2025 01:53 AM
நாமக்கல், “நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் மற்றும் அணியாபுரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பனை விதை நடவு செய்தனர்.
நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் பஞ்சாயத்து, நீலியங்காட்டுக்குட்டையில், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் சேகரிக்கப்பட்ட 7,500 பனை விதைகளில், 1,000 பனை விதைகளை, பசுமை படைமாணவர்கள், ஜே.ஆர்.சி., மாணவர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் நடவு செய்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் தர்மராசு, துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவ தொண்டர்கள் மற்றும் பசுமை படை உறுப்பினர்கள் இணைந்து, அணியபுரத்தில் அமைந்துள்ள ஏரிக்கரை பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, மண்வளத்தை பாதுகாத்து வளமான தமிழகத்தை உருவாக்கிடும் முயற்சியின் ஒரு பகுதியாக, 1,000 பனை விதைகளை நடவு செய்தனர்.
கடந்த மாதத்தில் தொட்டிப்பட்டி ஏரிக்கரை பகுதியில், 2,000 பனை விதைகளை நடவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. பள்ளியின் பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுமதி, என்.எஸ்.எஸ்., அலுவலர் பாவை அரசி, உடற்கல்வி இயக்குனர் செல்லம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

