/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கண் கண்ணாடி கடையில் தீ ரூ.10 லட்சத்தில் பொருள் சேதம்
/
கண் கண்ணாடி கடையில் தீ ரூ.10 லட்சத்தில் பொருள் சேதம்
கண் கண்ணாடி கடையில் தீ ரூ.10 லட்சத்தில் பொருள் சேதம்
கண் கண்ணாடி கடையில் தீ ரூ.10 லட்சத்தில் பொருள் சேதம்
ADDED : டிச 26, 2024 01:20 AM
ப.வேலுார், டிச. 26--
ப.வேலுார் கண் கண்ணாடி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் திருவள்ளூர் சாலையில், பொத்தனுாரை சேர்ந்த நாகரத்தினம், 50, கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம், கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றார். மாலை, 4:00 மணியளவில் கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதால், அருகில் இருந்த கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது இதுகுறித்து, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் கண் கண்ணாடி கடை முழுவதும் எரிந்ததால், கடையில் இருந்த கண் பரிசோதனை கருவி இயந்திரம் மற்றும் கண் கண்ணாடிகள் என, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமாகின. பரமத்தி வேலுார் போலீசார் வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.