நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஈ காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 50.
இவர், தகர சீட் அமைக்கப்பட்ட கூரை வீட்டில் வசித்து வருகிறார். தற்போது கோடை வெயிலை குறைக்க, வீட்டின் கூரை மீது தென்னங்கீற்றுகளை போட்டு வைத்திருந்தார். இந்த வீட்டில், நேற்று மதியம், 3:00 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தென்னங்கீற்றுகள் வெயிலுக்கு நான்கு காய்ந்திருந்ததால், தீ மளமளவென பரவியது. தகவலறிந்து வந்த வெப்படை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.

