/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம்
/
தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம்
ADDED : அக் 12, 2025 02:40 AM
நாமக்கல்: தமிழகம் முழுவதும், தீயணைப்புத்துறை சார்பில், 'நாங்கள் மீட்ப-தற்காக சேவை செய்கிறோம்' என்ற குறிக்கோளுடன், பொதுமக்க-ளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில், 'வருகை தந்து கற்றுக்கொள்ளுங்கள்' என்ற தலைப்பில், தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், நாமக்கல் தீய-ணைப்பு நிலையத்தில் நடந்த தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்-சிக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்பாஸ் தலைமை வகித்தார். சேலம் மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்-குனர் கல்யாண்குமார் பங்கேற்று, தீ விபத்து ஏற்படாமல் தடுப்-பது தடுப்பது எப்படி, தீயை அணைப்பது எப்படி, தீ விபத்தில் சிக்கிக்கொண்டால் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து விளக்-கினார்.தொடர்ந்து, மின்சார சாதனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்-வாறு அணைப்பது, எண்ணெயில் ஏற்படும் தீயை அணைப்பது, காஸ் சிலிண்டரில் தீ பிடித்தால் அணைக்கும் முறைகள், தீ விபத்தில் சிக்கிக்கொண்டால் தப்பிக்கும் வழிகள், தீ விபத்தில் சிக்கியவரை காப்பாற்றும் முறைகள் குறித்து, பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் தீபாவளியன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்-றியும், வட
கிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் தப்பிப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடு-களை, நாமக்கல் தீயணைப்பு நிலைய உதவி கோட்ட அலுவலர் தவமணி, அலுவலர்கள் செய்திருந்தனர்.
'நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில், இன்று (அக்., 12) காலை, 10:00 முதல், 11:00 மணி வரையும், பகல், 12:00 முதல், 1:00 மணி வரை, மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை தீ தடுப்பு பயிற்சி நடக்கிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெ-றலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.