ADDED : அக் 02, 2026 04:54 AM
மல்லசமுத்திரம்:எலச்சிபாளையத்தில் அனுமதியின்றி, தீபாவளி பட்டாசு புதுக்கி வைத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பாண்டமங்கலத்தில்
நேற்று முன்தினம் நாட்டு வெடி வெடித்து மூன்று பேர் பலியாயினர்.
இதையடுத்து, போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், எலச்சிபாளையத்தில் நாகரத்தினம், 63, என்பவர்
தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்துவதற்காக, போலீசாரிடம் முன் அனுமதி
பெறாமல், பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் நேற்று, போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பதுக்கி
வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பட்டாசுகளை போலீசார்
பறிமுதல் செய்து, வையப்பமலையில் உள்ள திருமுருகன் பயர் ஒர்க்ஸ்
குடோனில் பாதுகாப்பாக வைத்தனர்.
இது தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சுதா வழக்கு பதிந்து, நாகரத்தினத்தை கைது செய்து, சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
