ADDED : அக் 02, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்.:குமாரபாளையத்தில், வெடி பொருட்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்
அருகே பல்லக்காபாளையம் பகுதியில், மாரப்பன் என்பவரது விவசாய
நிலத்தில் உள்ள பாறைகளை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தனர். இதற்காக,
திருச்செங்கோடு பகுதியில் உள்ள பாலசுந்தரம், 55, என்பவரிடம் வெடி
மருந்து வாங்கப்பட்டது.
தகவலறிந்த குமாரபாளையம் போலீசார்
அனுமதியின்றி வைத்திருந்த, 140 கிலோ வெடி மருந்து கைப்பற்றினர்.
பின்னர் பாலசுந்தரத்தை கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி
வருகின்றனர்.
