ADDED : ஏப் 19, 2025 01:58 AM
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில், தீத்தொண்டு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக, அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் பேசுகையில், ''தீயணைக்கும் பணி, மீட்பு பணி ஆகிய பணிகளில் அர்ப்பணிப்புடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் பணியாற்றி வருகின்றனர்.
பல நண்பர்கள் பணியின் போது உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் சேவையே தங்கள் சேவை என்று பணியாற்றி வருகின்றனர். தீத்தடுப்பு செயல்முறைகள் குறித்து ஆங்காங்கே முக்கிய இடங்களில் செயல்முறை விளக்கம் கொடுத்து வருகிறோம். பொதுமக்கள் இதனை பயன்படுத்தி, தீ விபத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

