/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் 30 வரை 24 மணி நேரமும் பட்டாசு கடை, வணிக நிறுவனம் செயல்பட அனுமதி
/
வரும் 30 வரை 24 மணி நேரமும் பட்டாசு கடை, வணிக நிறுவனம் செயல்பட அனுமதி
வரும் 30 வரை 24 மணி நேரமும் பட்டாசு கடை, வணிக நிறுவனம் செயல்பட அனுமதி
வரும் 30 வரை 24 மணி நேரமும் பட்டாசு கடை, வணிக நிறுவனம் செயல்பட அனுமதி
ADDED : அக் 27, 2024 04:03 AM
நாமக்கல்: 'வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, வரும், 30 வரை, 24 மணி நேரமும், பட்டாசு கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படலாம் என, கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர்' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளயைன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:வணிகர்களாகிய நாங்கள், ஜி.எஸ்.டி., வணிக உரிமம் ஆகிய-வற்றை முறையாக பெற்று தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் வரி, குப்பை வரி என பல்வேறு வரிகள் செலுத்தி தொழில் செய்து வருகிறோம். நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறோம். ஆனால், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், சிலர் மாவட்ட நிர்வாகத்தின் எந்த ஒரு அனுமதியும் பெறாமல், திரு-மண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, தற்காலிக கடைகள் அமைத்து ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்-களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், வணிகர்களின் பண்டிகை கால விற்பனை மிக கடு-மையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் பணி-யாளர்களுக்கு, சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், இவ்வாறு மண்டபங்களில் தற்காலிக கடைகள் அமைக்க தடைவிதித்து, வணிகர்களின் வாழ்வாதா-ரத்தை காக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும், 30 வரை, பட்டாசு கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும், இரவு, 1:00 மணி வரை செயல்படவும், பஸ் ஸ்டாண்ட் கடைகள், 24 மணி நேரமும் செயல்படவும் அனுமதி வழங்க வேண்டும் என, நாமக்கல் கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 'வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வணிகர்கள் தொழில் செய்ய ஏதுவாக வரும், 30 வரை, 24 மணி நேரமும், பட்டாசு கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படலாம்' என, கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.