/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வினாடி - வினா போட்டிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு: 111 பேர் பங்கேற்பு
/
வினாடி - வினா போட்டிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு: 111 பேர் பங்கேற்பு
வினாடி - வினா போட்டிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு: 111 பேர் பங்கேற்பு
வினாடி - வினா போட்டிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு: 111 பேர் பங்கேற்பு
ADDED : டிச 22, 2024 01:20 AM
நாமக்கல், டிச. 22-
மாவட்ட அளவிலான முதல்நிலை எழுத்துத்தேர்வில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், தாசில்தார், அரசு ஊழியர்கள் என மொத்தம், 111 பேர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி, 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா போட்டி வரும், 28ல், விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரியில் நடக்கிறது. இதையடுத்து, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில், முதல் நிலை எழுத்து தேர்வு, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று மதியம், 2:00 முதல், 3:00 மணி வரை ஒரு மணி நேரம் முதல்நிலை எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், 202 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 92 பேர் பங்கேற்கவில்லை. தலைமையாசிரியர், ஆசிரியர்கள், தாசில்தார் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் என, மொத்தம், 111 பேர் கலந்து கொண்டனர்.
முதன்மை கண்காணிப்பாளர் ஜெகதீசன் பார்வையாளராக செயல்பட்டார். மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் (இடைநிலை) சந்திரசேகரன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
'இந்த முதல்நிலை எழுத்துத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, மூன்று குழுக்களாக பிரித்து, வரும், 28ல், விருதுநகரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்' என, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு, முதல் பரிசு, 2 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 1.50 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுவதுடன், மற்ற குழுக்களுக்கு ஊக்கப்பரிசாக, 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது,