/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புஆற்றில் மீன்பிடிப்பு பாதிப்பு
/
ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புஆற்றில் மீன்பிடிப்பு பாதிப்பு
ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புஆற்றில் மீன்பிடிப்பு பாதிப்பு
ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புஆற்றில் மீன்பிடிப்பு பாதிப்பு
ADDED : மே 04, 2025 01:10 AM
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில், ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து தண்ணீர் தெரியாதளவுக்கு ஆக்கிரமித்துள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து பார்க்கும்போது, விவசாய நிலம் போல பசுமையாக காட்சியளிக்கிறது.
அந்தளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளன. இதன் காரணமாக, ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் வரும் பொதுமக்கள், கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், மீனவர்கள் பரிசலில் சென்று, வலைபோட்டு மீன் பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மீன் பிடிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கும்போது, ஆகாயத்தாமரை செடிகள் காலில் மாட்டி கொண்டால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.