/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் பாதுகாப்பான இடத்தில் மக்கள்
/
குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் பாதுகாப்பான இடத்தில் மக்கள்
குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் பாதுகாப்பான இடத்தில் மக்கள்
குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் பாதுகாப்பான இடத்தில் மக்கள்
ADDED : டிச 22, 2024 03:19 AM
எலச்சிபாளையம்: மணலி ஜேடர்பாளையத்தில், குடியிருப்பை மழை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்-டனர்.
எலச்சிபாளையம் யூனியன், பெரியமணலி ஊராட்சி, மணலி ஜேடர்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, கனமழை கொட்டியது. இதனால் இப்பகுதியில், 21குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், பெரியமணலி-ஏளூர் சாலையில் தண்ணீர் சென்றதால், சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி கால்வாய் அமைத்து தண்ணீர் சென்றது. இதனால், அப்பகு-தியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வருவாய் துறை சார்பில், 21குடும்பங்களை சேர்ந்த, 62பேர் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்-டனர்.
அவர்களுக்கு உணவு வசதி செய்து தரப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில், மக்களுக்கு காய்ச்சல் அல்லது வேறு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டுள்ளதா என கண்காணிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அப்பகுதி முழுவதும் நோய்தொற்று பரவாத வகையில், பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.
குடியிருப்பை சூழ்ந்த தண்ணீர், மோட்டார் வைத்து வெளியேற்-றப்பட்டது. எலச்சிபாளையம் பி.டி.ஓ.,லோகமணிகண்டன் சம்-பவ இடத்தில் பார்வையிட்டு, மக்களுக்கு தேவையான அடிப்-படை வசதிகளை செய்து கொடுத்தார். திருச்செங்கோடு நெடுஞ்-சாலைதுறை சார்பில், பெரியமணலி-ஏளூர் சாலையில், மழைநீர் செல்லும் வகையில் சிறுபாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல், மல்லசமுத்திரம் பகுதியில் பெய்த கன மழையால், சின்னஏரி நிரம்பி வையப்பமலை சாலையில் தேங்கி நின்றது. டவுன் பஞ்சாயத்து சார்பில் தண்ணீரை அகற்றினர்.