/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனைத்து அம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல், கம்பம் நடும் விழா
/
அனைத்து அம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல், கம்பம் நடும் விழா
அனைத்து அம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல், கம்பம் நடும் விழா
அனைத்து அம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல், கம்பம் நடும் விழா
ADDED : பிப் 21, 2024 01:37 AM
குமாரபாளையம்;குமாரபாளையத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் மறு பூச்சாட்டு விழா நேற்று நடந்தது. கடந்த, 21ல் கொடியேற்றம், 27ல் அம்மனுக்கு தீர்த்தக்குடம் புனித நீர் ஊற்றுதல், தேர் கலசம் வைத்தல், காவிரி ஆற்றுக்கு சென்று சக்தி அழைத்து வருதல், 28ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் விழா, அலங்கார ஆராதனை, 29ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டிவேடிக்கை, மார்ச், 1ல் தேர்நிலை அடைதல், நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் திருவீதி உலா, வரும், 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, 3ல் ஊஞ்சல் விழா ஆகியவை நடக்கிறது. தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் தம் மண்ணன் வீதி, 24 மனை மாரியம்மன் கோவிலில், நேற்று பூச்சாட்டு விழாவையொட்டி, அம்மன் மீனாட்சி சொக்கநாதர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேவாங்கர் மாரியம்மன், பெரிய மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடந்தன.
கோவில் திருவிழாவிற்காக பூட்டப்பட்ட
சமுதாய கூடத்தை திறக்க கோரிக்கை
நாமக்கல், பிப். 21-
'கோவில் திருவிழாவை நடத்தவும், தளவாட பொருட்களை பயன்படுத்தவும், ஆர்.டி.ஓ., உத்தரவின்படி, பூட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறப்பதுடன், விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதரவேண்டும்' என, கடந்தப்பட்டி கிராம மக்கள், கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சத்திரம் யூனியன், கடந்தப்பட்டி கிராமத்தில், அங்காளம்மன், பெரியகாண்டியம்மன், முத்துக்குமரன், காமாட்சியம்மன் கோவில் மாசி திருவிழாவுக்கு பாதுகாப்பு கோரி, ஊர் நாட்டாமைக்காரரும், அறக்கட்டளை தலைவருமான கோவிந்தராசு சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஆர்.டி.ஓ.,வுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த, 13ல், கோவில் விழாவை தடை செய்யும் வகையில், சிலர் சமுதாய கூடத்தை பூட்டினர். இது தொடர்பாக, புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த, 16ல் ஆர்.டி.ஓ., முன்னிலையில், அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, கோவில் திருவிழாவிற்காகவும், கோவில் தளவாட பொருட்களை பயன்படுத்தவும், பூட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சமுதாய கூடம் திறக்கவில்லை. ஆர்.டி.ஓ., உத்தரவும் மதிக்கவில்லை. கோவில் திருவிழாவிற்கு சில நாட்களே இருப்பதால், பூட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறந்துவிட வேண்டும். கோவில் திருவிழா நடத்துவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

