ADDED : மார் 17, 2024 02:48 PM
எருமப்பட்டி: இந்தாண்டு மழை பெய்யாத தால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், புளியஞ்சோலை பகுதியில் இருந்து, விவசாயிகள் வைக்கோல் கட்டுகளை விலை கொடுத்து வாங்கி சேமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேந்தமங்கலம், எருமப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதி கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளதால், இங் குள்ள ஏரி, குளங்கள் நிரம்பி காணப்பட்டது. ஆனால், இந்தாண்டு போதிய மழை இல்லாததால் ஏரி, குளங்கள் வறண்டு, கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து கால்நடைகளுக்கு தீவன தட் டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால், புளியஞ்சோலை பகுதியில் மாசி மாதப்பட்ட நெல் அறுவடை செய்யப்படும் நிலையில், அங்கிருந்து விவசாயிகள் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல்களை வாங்கி வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, சேந்தமங்க லத்தை சேர்ந்த விவசாயி ராம சாமி கூறுகையில், ''மாவட்டம் முழுதும் இந்தாண்டு கால்நடைகளுக்கு தீவன தட் டுப்பாடு ஏற்படும் நிலை உள் ளது. இதனால், தற்போது புளி யஞ்சோலை பகுதியில் நெல் அறுவடை பணி நடக்கிறது. அங்கு லாரிகளில் சென்று, ஒருகட்டு வைக்கோல், 220 ரூபாய்க்கு வாங்கி வந்து சேமித்து வருகிறோம்,'' என்றார்.

