/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அன்னதானம் வழங்கல்: 4 டன் குப்பை அகற்றம்
/
அன்னதானம் வழங்கல்: 4 டன் குப்பை அகற்றம்
ADDED : ஜன 16, 2025 06:39 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பாலத்தில் குவிந்திருந்த, 4 டன் குப்பையை, நகராட்சி துாய்மை பணியார்கள் கற்றினர்.
சேலம், நாமக்கல் மற்றும் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பள்ளிப்பாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, நேற்று காவிரி ஆற்றுப்பாலம் வழியாக சென்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, பாக்கு தட்டில் அன்னதானம் வழங்கினர். மேலும், டீ, காபியும் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாப்பிட்ட பின் தட்டு, டீ டம்ளர் உள்ளிட்டவற்றை பாலத்தின் சாலையில் அப்படியே போட்டுவிட்டு சென்றனர். இதனால் சாலை முழுவதும் குப்பையாக காட்சியளித்தது. இதையடுத்து, பள்ளிப்பாளையம் நகராட்சி துாய்மை பணியாளர்கள், 4 டன் குப்பையை அகற்றினர்.