/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விஜயகாந்த் பிறந்தநாள் விழா 50,000 பேருக்கு அன்னதானம்
/
விஜயகாந்த் பிறந்தநாள் விழா 50,000 பேருக்கு அன்னதானம்
விஜயகாந்த் பிறந்தநாள் விழா 50,000 பேருக்கு அன்னதானம்
விஜயகாந்த் பிறந்தநாள் விழா 50,000 பேருக்கு அன்னதானம்
ADDED : ஆக 26, 2025 01:00 AM
திருச்செங்கோடு, நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், அக்கட்சி விஜயகாந்த் பிறந்த நாள் விழா, நேற்று வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் தலைமை வகித்து, 50,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில், ஆலம்பாளையம் பேரூர் செயலாளர் முரளி தலைமையில் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் சார்பில், கொக்கராயன்பேட்டை நால் ரோட்டில், ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில், 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பள்ளிப்பாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி தலைமையில், திருச்செங்கோடு ரோடு டி.வி.எஸ்.,மேட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. குமாரபாளையம் நகரம் சார்பில், நாராயண நகர் மக்கள், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் விஜய் சரவணன், பொருளாளர் மகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் பாலு, ரமேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுரேஷ், மாவட்ட தொண்டரணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ஞான பிரதீப், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மணிகண்டன், குமாரபாளையம் நகர செயலாளர் நாராயணசாமி, இளைஞரணி நகர செயலாளர் சிவக்குமார், வெள்ளியங்கிரி, சந்தோஷ்குமார், படைவீடு பேரூர் செயலாளர் சக்தி வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.