/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 50,000 பேருக்கு அன்னதானம்
/
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 50,000 பேருக்கு அன்னதானம்
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 50,000 பேருக்கு அன்னதானம்
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 50,000 பேருக்கு அன்னதானம்
ADDED : ஆக 25, 2025 03:11 AM
திருச்செங்கோடு: தே.மு.தி.க., நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் வெளியிட்ட அறிக்கை: தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, இன்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் 50,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அன்னதானம் நடைபெறும் இடங்கள்: காலை, 9:30 மணிக்கு, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, 11:00 மணிக்கு குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, 1:00 மணிக்கு, ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், 5:00 மணிக்கு திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே என, மேற்கண்ட இடங்களில், கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை, வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட உள்ளது.
மேலும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மரக்கன்று வழங்குதல், மாற்று திறனாளிகளுக்கு உதவி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்கள், சீருடைகள், முதியோர் இல்லத்திற்கு உதவிகள் வழங்கப்பட உள்ளது.ஏற்பாடுகளை மாவட்ட அவைத்தலைவர் சவுந்தரராஜன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் ராசிபுரம் பாலச்சந்தர், திருச்செங்கோடு சக்திவேல், ராசிபுரம் தொகுதி பொறுப்பாளர் சேகர் ஆகியோர் செய்துள்ளனர். அந்தந்த பகுதிக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர், துணை செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் கலந்துகொண்டு, அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.