/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு 10 கடைக்கு நோட்டீஸ் வழங்கல்
/
உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு 10 கடைக்கு நோட்டீஸ் வழங்கல்
உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு 10 கடைக்கு நோட்டீஸ் வழங்கல்
உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு 10 கடைக்கு நோட்டீஸ் வழங்கல்
ADDED : ஜன 04, 2025 01:30 AM
திருச்செங்கோடு, ஜன. 4-
திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மஞ்சுளா ஆகியோர் தலைமையில், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்ட், நகர பகுதிகளில் உள்ள பேக்கரி, உணவகங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பேக்கரி கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிஸ்கட், பேரிச்சம் பழம், குளிர்பானம் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் காலாவதியாகி உள்ளதா என, சோதனையிட்டனர். மேலும், கேக் உள்ளிட்ட உணவுகள் மீது வண்ணங்களை சேர்க்கக் கூடாது என, பேக்கரி உரிமையாளர்களை, உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்தனர். 30க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த ஒரு கடைக்கு, 10,000 ரூபாய்; புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு, 15,000 ரூபாய் என, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வழக்குப்பதிய ஏதுவாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.