/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பலகாரங்களில் செயற்கை நிறமூட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
/
பலகாரங்களில் செயற்கை நிறமூட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
பலகாரங்களில் செயற்கை நிறமூட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
பலகாரங்களில் செயற்கை நிறமூட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
ADDED : அக் 14, 2024 06:17 AM
ப.வேலுார்: தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகளை தயாரிக்க செயற்கை நிற-மூட்டிகளை பயன்படுத்தினால், பலகார வகைகள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்படும் என, ப.வேலுார் உணவு பாது-காப்பு அலுவலர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பரமத்தி வேலுார் தாலுகா சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி ஹோட்டல், ரெஸ்டாரன்ட், பேக்கரி, திரு-மண மண்டபங்கள் மற்றும் பல பகுதிகளில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு தயா-ரிக்கப்படும் உணவு வகைகளில் செயற்கை நிறமூட்டிகளை பயன்-படுத்த கூடாது. மேலும், இனிப்பு கார வகைகள் தயாரிக்க உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும். சுத்-தமான, சுகாதாரமான இடங்களில் மட்டுமே இனிப்பு, கார வகைகள் தயாரிக்க வேண்டும்.ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தரமான மூலப்பொருட்களை பயன்படுத்த வேண்டும். பலகார வகைகளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தக் கூடாது. விதிகளை மீறினால், பலகாரங்களை பறி-முதல் செய்து, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.