/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல் கடைகளுக்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

ADDED : ஆக 15, 2025 03:19 AM
மல்லசமுத்திரம் :மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல் நேற்று, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார் மற்றும் செயல் அலுவலர் மூவேந்தரபாண்டியன், டவுன் பஞ்., பணியாளர்கள் கடைகளில் ஆய்வு செய்தனர். மல்லசமுத்திரம் கடைவீதியில் சரவணா ஸ்டோர் கடையின் குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 580 கிராம் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது கைப்பற்றப்பட்டது. இந்த கடைக்கு, 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், பல்வேறு கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், 55 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு, 8,500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது.