/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு
/
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : டிச 06, 2024 07:35 AM
நாமக்கல்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், எட்டாம் ஆண்டு நினைவு தினம், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் மெயின் ரோடு அண்ணாதுரை, ஈ.வே.ரா., எம்.ஜி.ஆர்., சிலைகள் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை வகித்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு, அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடைவீதி அருகிலும், ஐயப்பன் கோவில் அருகே, அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் சட்டசபை தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம், நகர அவைத்தலைவர் விஜய்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
* மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி, ராமாபுரம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலர் ராஜன், நிர்வாகிகள் குழந்தைவேல், கோபால், அருள்பிரகாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பேரூர் அ.தி.மு.க., சார்பில் மெட்டாலாவில் நடந்த நிழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலர் சரவணன் தலைமை வகித்தார். ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் நகர செயலர் மணிக்கண்ணன் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. ராசிபுரம் பஸ் நிலையத்தில் நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் பலர் அஞ்சலி செலுத்தினர்.