/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்: தி.மு.க.,வினர் அமைதி பேரணி
/
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்: தி.மு.க.,வினர் அமைதி பேரணி
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்: தி.மு.க.,வினர் அமைதி பேரணி
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்: தி.மு.க.,வினர் அமைதி பேரணி
ADDED : ஆக 08, 2025 01:42 AM
நாமக்கல், முன்னாள் முதல்வர் கருணாநிதி
யின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில், தி.மு.க., சார்பில் அமைதி பேரணி நடந்தது.
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நாமக்கல் அண்ணாதுரை சிலை அருகில் இருந்து அமைதி பேரணி துவங்கியது. மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, பரமத்தி சாலையில் உள்ள செலம்பகவுண்டர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை வரை நடந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு எம்.பி., ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மலர்துாவி மரியாதை செலுத்தினர். இதில் திரளான தி.மு.க.,வினர் கலந்துகொண்டனர்.
*திருச்செங்கோடு மேற்கு நகர தி.மு.க., சார்பாக, கருணாநிதி நினைவு
தின அமைதி ஊர்வலம் நடந்தது. திருச்செங்கோடு பழைய பஸ்
நிலையம் அண்ணாசிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மூர்த்தி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தினர். திருச்செங்கோடு மேற்கு நகர தி.மு.க., செயலாளர் நடேசன், கிழக்கு செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி தலைவர் நளினி, மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.