/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையத்தில் 15,000 ஓட்டுகள் இல்லை;முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
/
குமாரபாளையத்தில் 15,000 ஓட்டுகள் இல்லை;முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
குமாரபாளையத்தில் 15,000 ஓட்டுகள் இல்லை;முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
குமாரபாளையத்தில் 15,000 ஓட்டுகள் இல்லை;முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : செப் 15, 2025 01:34 AM
நாமக்கல்:அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., தமிழகத்தை மீட்போம்; மக்களை காப்போம் என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்காக, நாமக்கல் மாவட்டத்தில், வரும், 19, 20, 21 என, மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான ஆலோசனை கூட்டம் நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், இ.பி.எஸ்., வரும் நேரத்தில் வரவேற்கும் கூட்டம் தான் தேர்தல் கூட்டம் என்று மனதில் வைத்து செயல்பட வேண்டும். இந்த சுற்றுப்பயணம் கூட்டம் முடிந்த பின், இறந்த வாக்காளர்கள், அடையாளம் தெரியாத வாக்காளர்கள் என்று கட்சியினர் பட்டியலை தொகுத்து, மாவட்ட கலெக்டரிடம் அளிக்க வேண்டும். கலெக்டர் நீக்க வில்லை என்றால், நீதி மன்றத்தை நாட வேண்டும். குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகரத்தில், 15,000 வாக்காளர்கள் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஜெ., பேரவை செயலர் சந்திரசேகர், மாநில வக்கீல் அணி பிரிவு துணை தலைவர் பாலுசாமி, மாநில வர்த்தகரணி துணை செயலாளர் மோகன், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் தமிழ்மணி, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.