/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரும்பு டன்னுக்கு ரூ.6,000 வழங்க வலியுறுத்திபட்ஜெட் தாக்கலின்போது கோட்டை முற்றுகை
/
கரும்பு டன்னுக்கு ரூ.6,000 வழங்க வலியுறுத்திபட்ஜெட் தாக்கலின்போது கோட்டை முற்றுகை
கரும்பு டன்னுக்கு ரூ.6,000 வழங்க வலியுறுத்திபட்ஜெட் தாக்கலின்போது கோட்டை முற்றுகை
கரும்பு டன்னுக்கு ரூ.6,000 வழங்க வலியுறுத்திபட்ஜெட் தாக்கலின்போது கோட்டை முற்றுகை
ADDED : ஜன 01, 2025 01:36 AM
நாமக்கல், ஜன. 1-
''கரும்பு டன்னுக்கு, 6,000 ரூபாய் வழங்கக்கோரி, சட்டசபையை முற்றுகையிடுவோம்,'' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறினார்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., அரசு, 2021ல் சட்டசபை தேர்தல் அறிக்கையில், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும் என, வாக்குறுதி அளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, மாநில தலைவர் வேலுசாமி கூறியதாவது:
தற்போது, பல்வேறு உற்பத்தி செலவினங்கள் மற்றும் விலை உயர்வு காரணமாக, விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையாக டன் ஒன்றுக்கு, 6,000 ரூபாய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலை நிர்வாகம், 3,151 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது. அதனால், தமிழகத்தில் விவசாயிகள் கரும்பு சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர்.
தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில்கொள்ளும்போது, கரும்பு சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக, 2024-25-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு, தமிழக அரசு, கரும்பு டன் ஒன்றுக்கு, 6,000 ரூபாய் விலை உயர்த்தி வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், வரும் நிதிநிலை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யும்போது, கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் ராஜேஸ், மாவட்ட தலைவர் பொன்னுசாமி, நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.