/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
என்.எம்.எம்.எஸ்., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச புத்தகம்
/
என்.எம்.எம்.எஸ்., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச புத்தகம்
என்.எம்.எம்.எஸ்., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச புத்தகம்
என்.எம்.எம்.எஸ்., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச புத்தகம்
ADDED : ஆக 21, 2025 02:10 AM
ராசிபுரம், அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வை, மத்திய அரசு நடத்துகிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 படிப்பை முடிக்கும் வரை, 48 மாதங்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வீதம், மொத்தம், 48,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்காக, 2025-26ம் கல்வியாண்டில் நடக்க உள்ள இத்தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெற வசதியாக, ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தகுதி தேர்வு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் ரோட்டரி சங்க தலைவர் சுரேந்திரன் தலைமையில், புதுச்சத்திரம் யூனியன், கதிராநல்லுார், வெண்ணந்துார் பஞ்., யூனியன், ஆர்.புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளி, ராசிபுரம் காட்டூர் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட, ஒன்பது நடுநிலைப்பள்ளிகளுக்கு, 51 செட் புத்தகங்களும், நாமகிரிப்பேட்டை பஞ்., யூனியன் வட்டார கல்வி மையத்தை சேர்ந்த, 17 நடுநிலை பள்ளிகளுக்கு, 55 செட் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

