ADDED : அக் 18, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இலவச பல்
சிகிச்சை முகாம்
குமாரபாளையம், அக். 18-
குமாரபாளையம் போலீசார் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பல், தோல் சிகிச்சை முகாம் அரசு மருத்துவமனையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, தலைமை டாக்டர் பாரதி தலைமை வகித்தனர். குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு பல் மற்றும் தோல் பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக பராமரிக்கும் வழிமுறை குறித்து விளக்கப்பட்டது.