ADDED : ஜூன் 23, 2025 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடந்-தது. மாவட்ட பசிப்பிணி திட்ட தலைவர் சண்முகசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார்.
ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்-கேற்று, பொதுமக்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் இல-வசமாக வழங்கினர். இதில், 123 பயனாளிகள் பயனடைந்தனர். கண் அறுவை சிகிச்சைக்கு, 23 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்-டனர். முகாமில் சங்க தலைவர் கதிர்வேல், செயலாளர் சிவ-ராமன், பொருளாளர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்-டனர்.