/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்: 97 பேர் பங்கேற்பு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்: 97 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்: 97 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்: 97 பேர் பங்கேற்பு
ADDED : டிச 03, 2025 07:51 AM
நாமக்கல்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி அறிவுரைப்படி, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 21 முதல், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
அதன்படி, நாமக்கல் ஒன்றியத்தில் உள்ளடக்கிய கல்வி திட்டம் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், மாவட்ட உதவி திட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் புஷ்பராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 97 பேர் பயன்பெற்றனர்.
அவர்களுக்கு, மருத்துவர் குழுவினர், பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரை வழங்கினர். 13 பேருக்கு, அடையாள அட்டை புதுப்பித்தல், காதொலி கருவி, சக்கர நாற்காலி, தானியங்கி நாற்காலி ஆகியவற்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேற்பார்வையாளர் சசிராணி, சிறப்பு பயிற்றுனர்கள் ஆனந்தகுமார், அருள்குமார், இயன்முறை மருத்துவர் கவியரசு, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

