/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழில் முனைவோருக்கு இலவச திறன் பயிற்சிபெண்களுக்கு அழைப்பு
/
தொழில் முனைவோருக்கு இலவச திறன் பயிற்சிபெண்களுக்கு அழைப்பு
தொழில் முனைவோருக்கு இலவச திறன் பயிற்சிபெண்களுக்கு அழைப்பு
தொழில் முனைவோருக்கு இலவச திறன் பயிற்சிபெண்களுக்கு அழைப்பு
ADDED : மே 04, 2025 01:09 AM
நாமக்கல்:இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் அறிக்கை:
மத்திய அரசின் தேசிய வள அமைப்பான அகமதாபாத்தை சார்ந்த, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், நாமக்கல் மாவட்டத்தில் தொழில் முனைவோராக விருப்பமுள்ள, 18 முதல், 45 வயதுக்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சியான துணி, சணல் பொருட்களில் இருந்து தையல், லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், மணிபர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க, ஒரு மாத இலவச பயிற்சி, மோகனுாரில் அளிக்கப்பட உள்ளது.
இதில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்தல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த முகாமில் சேர, வரும், 7 காலை, 10:00 மணி முதல், நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், 88258 12528, 88704 49677 என்ற எண்களில் குறுஞ்செய்தி மூலம் பெயரை பதிவு செய்து, தேவையான விபரங்களை பெற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.