/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
8ல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
/
8ல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
8ல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
8ல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 06, 2025 06:20 AM

மோகனுார்: 'மோகனுார் வட்டார வளமையத்தில், வரும், 8ல், மாற்றுத்-திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது' என, மேற்பார்வையாளர் பாலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், மோகனுார் வட்டார வள மையத்தில், வரும், 8ல், மாற்றுத்-திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு, அறிவுத்திறன் குறைபாடு, செவித்-திறன் குறைபாடு, உடல் இயக்க குறைபாடு, தசை சிதைவு பாதிப்பு, புற உலக சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதம், பேச்சு மற்றும் மொழித்திறன் பாதிப்புடையோர் உள்ளிட்டோ-ருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாண-வர்களுக்கு, முகாமில் புதிதாக தேசிய அடையாள அட்டை வழங்-குதல், அடையாள அட்டையை புதுப்பித்தல், மாற்றுத்திறனாளிக-ளுக்கான தனித்துவம் வாய்ந்த யு.டி.ஐ.டி., கார்டு வழங்குதல், புதுப்பித்தல், உதவி உபகரணங்களுக்கு பதிவு செய்தல், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், கல்வி உதவித்தொகைக்கு விண்-ணப்பித்தல், கடுமையாக பாதிப்படைந்த குழந்தைகளின் பெற்-றோருக்கு, பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கு பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மனநல மருத்துவர், எலும்பு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பரிசோதனை செய்து, உரிய சான்றுக்கு பரிந்துரை செய்கின்றனர். மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள், ஐந்து பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, தேசிய அடையாள அட்டை, மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற மருத்துவ பரிசோத-னைகள் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

