/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜெயலலிதா நினைவு தினம்; அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு
/
ஜெயலலிதா நினைவு தினம்; அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு
ஜெயலலிதா நினைவு தினம்; அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு
ஜெயலலிதா நினைவு தினம்; அ.தி.மு.க.,வினர் அனுசரிப்பு
ADDED : டிச 06, 2025 06:19 AM
நாமக்கல்: தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாள-ருமான ஜெயலலிதாவின், 9ம் ஆண்டு நினைவு தினம், மாநிலம் முழுவதும், அக்கட்சியினர் அனுசரித்தனர்.
நாமக்கல் மாநகர, அ.தி.மு.க., சார்பில், பரமத்தி சாலை, செலம்ப கவுண்டர் பூங்காவில், எம்.ஜி.ஆர்., சிலை அருகில் அனு-சரிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் காளியப்பன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், ஒன்றிய செய-லாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்கள், அலங்-கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். முன்னாள் நகராட்சி தலைவர் கரிகாலன், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பி-னர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.* குமாரபாளையம், அ.தி.மு.க., சார்பில், பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் மவுன ஊர்வலம் தொடங்கியது. இதில், நகர செயலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். தொடர்ந்து, தாசில்தார் அலுவலகம் முன் உள்ள அண்ணாதுரை சிலை அருகே, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, மலர்கள் துாவி மரியாதை செலுத்தினர். பின், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், இரண்டு நிமிடம் மவுன அஞ்-சலி செலுத்தினர்.
* திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே, ஜெயலலிதாவின் உருவப்படம் வைத்து, முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி, நகர செயலாளர் அங்க-முத்து ஆகியோர் தலைமையில், அ.தி.மு.க.,வினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சந்-திரசேகர், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் அணி மாவட்ட பொருளாளர் பரணிதரன் மற்றும் நகராட்சி கவுன்-சிலர்கள் கலந்துகொண்டனர்.
* நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். அம்மா பேரவை மாவட்ட தலைவர் குமரேசன், நகர செயலாளர் மணிக்-கண்ணன் ஆகியோர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ராசிபுரம் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், நாமகிரிப்பேட்டை, மெட்டாலா பஸ் ஸ்டாப்பில், அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
* பள்ளிப்பாளையம் நகர, ஒன்றிய, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., அ.தி.மு.க., சார்பில், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நகர செயலாளர் வெள்ளியங்கிரி தலைமையில் அஞ்-சலி செலுத்தினர். தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், நகர பேரவை செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் சிவக்குமார், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் சிங்-காரவேல், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்லத்-துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

