/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இருபெரும் காப்பியங்கள் 27 மொழியில் மொழிபெயர்க்க நிதி: அரசுக்கு பாராட்டு

ADDED : மார் 05, 2024 12:03 PM
நாமக்கல்: 'மணிமேகலை, சிலப்பதிகாரம் காப்பியங்களை, 27 மொழிகளில் மொழி பெயர்க்கவும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு பாராட்டு' என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாரதிதாசன் இலக்கிய பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. பேரவை தலைவர் கருப்பண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரகோத்தமன் வரவேற்றார். கூட்டத்தில், தமிழக நிதிநிலை அறிக்கையில், ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள சிலப்பதிகாரம், மணிமேகலை இருகாப்பியங்களை, 27 மொழிகளில் மொழி பெயர்க்கவும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கீடு செய்த அரசுக்கு பாராட்டுக்கள்.
மேலும், மீதமுள்ள மூன்று காப்பியங்களையும் மொழி பெயர்த்து, தமிழ் மக்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் போற்றி காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான்கு நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், சாலைகள் ஆகியவற்றிக்கு, தமிழறிஞர்கள், தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் வாழ்ந்த தியாகிகளின் பெயர்களை வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பேரவை நிர்வாகிகள் துரைபாண்டியன், பெரியசாமி, மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.