/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணம் வைத்து சூதாட்டம்: 30 பேர் அதிரடி கைது
/
பணம் வைத்து சூதாட்டம்: 30 பேர் அதிரடி கைது
ADDED : மே 24, 2024 06:55 AM
குமாரபாளையம் : குமாரபாளையத்தில், பணம் வைத்து சூதாட்டம் ஆடிய, 30 பேர் கைது செய்யப்பட்டு, இரண்டு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
குமாரபாளையம், மேற்கு காலனி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக, திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவரம்பனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அதிகாலை, 1:00 மணியளவில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், உள்ளிட்ட போலீசாருடன், சம்பவ இடத்தை சுற்றி வளைத்த போலீசார், அங்கு பல குழுக்களாக சீட்டுக்கட்டுகளுடன், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த, 31 பேரில், 30 பேரை கைது செய்தனர். செந்தில் என்பவர் தலைமறைவானார்.சம்பவ இடத்தில் இருந்து, ஒரு லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.