/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகை கதர் விற்பனை இலக்கு ரூ.87.60 லட்சம்'
/
காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகை கதர் விற்பனை இலக்கு ரூ.87.60 லட்சம்'
காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகை கதர் விற்பனை இலக்கு ரூ.87.60 லட்சம்'
காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகை கதர் விற்பனை இலக்கு ரூ.87.60 லட்சம்'
ADDED : அக் 03, 2025 01:59 AM
நாமக்கல் ''காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கதர் ரகங்கள் விற்பனை செய்ய, 87.60 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்தார்.
நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், காதி கிராப்ட் கதர் விற்பனை அங்காடி உள்ளது. இங்கு, காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு விற்பனை துவக்க விழா நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, கதர் மற்றும் கிராம பொருள் ரகங்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னதாக, மகாத்மா காந்தி படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய திருநாட்டின் இதயமாக விளங்கும் கிராமப்புற ஏழை எளிய நுாற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற்குறிக்கோளாக கொண்டு, தமிழக கதர் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கதர் ரகங்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 87.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்ய, தமிழக கதர் கிராமத் தொழில் வாரியத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காதி கிராப்ட் பொருட்களை www.tnkvib.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் வாங்கலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.