/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செல்லப்பம்பட்டியில் நவராத்திரி நிறைவு விழா மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை
/
செல்லப்பம்பட்டியில் நவராத்திரி நிறைவு விழா மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை
செல்லப்பம்பட்டியில் நவராத்திரி நிறைவு விழா மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை
செல்லப்பம்பட்டியில் நவராத்திரி நிறைவு விழா மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை
ADDED : அக் 03, 2025 01:59 AM
நாமக்கல், நவராத்திரி நிறைவு விழாவில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, 50,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில், சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, 14ம் ஆண்டு நவராத்திரி விழா, நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
நவராத்திரி நாட்களில் சுவாமி ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளித்தார். நவராத்திரி நிறைவு நாளான நேற்று முன்தினம், சுவாமி கூத்தனுார் சரஸ்வதி அம்மனாக அருள் பாலித்தார். நிறைவு நாள் விழாவில், செல்லப்பம்பட்டியை சேர்ந்த பொறியியல் கல்வி கணினி அறிவியல் படிக்கும் லத்திகாஸ்ரீ என்ற மாணவிக்கு, உயர் கல்வி படிக்க, 20,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
அதேபோல், சென்னை மருத்துவ துணை படிப்பு பயிலும் மாணவி, லக்சிதாவுக்கு, 10,000 ரூபாய், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பெற்றோரை இழந்த மாணவர் தர்ம குருவிற்கு, 10,000 ரூபாய், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவி கிருத்திகாவிற்கு, 10,000 ரூபாய் உதவித்தொகையும், கிரமாத்தில் படிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. மேலும், முதியோர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.
இந்த கல்வி உதவித்தொகையை, அமெரிக்காவில் பணியாற்றும் முன்னாள் மாணவர் நாமக்கல்லை சேர்ந்த பொறியாளர் சந்திரசேகரன், துபாயில் பணியாற்றும் பொறியாளர் குமார், மணிவேல், சென்னையில் பணியாற்றும் டாக்டர் தன்ராஜ், பொறியாளர் பாலசுப்ரமணி ஆகியோர் வழங்கினர்.