/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி பாலத்தில் பள்ளம் ; தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
காவிரி பாலத்தில் பள்ளம் ; தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 24, 2024 06:55 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தின் ஓரிடத்தில் சேதமடைந்து பள்ளம் போல காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
நாமக்கல்-ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே, உயர் மட்டம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஏழு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. உயர் மட்டம் பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பாலத்தின் மேற்பரப்பு கான்கிரீட் தளத்தில், ஒரு இடத்தில் சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்தது. வாகனங்கள் செல்ல, செல்ல சேதம் அதிகரித்து கான்கிரீட் தளம் முழுமையாக சேதடைந்துள்ளதால், வட்ட வடிவத்தில் பள்ளம் போல காணப்படுகிறது. இரவு நேரத்தில் டூவீலரில் கவனக்குறைவாக சென்றால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சேதமடைந்தை பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.