/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குப்பையை தரம் பிரித்து கொடுத்தால் மட்டுமே வாங்கப்படும்: டவுன் பஞ்., நிர்வாகம் அறிவிப்பு

ADDED : மே 03, 2024 07:26 AM
ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 30,000 க்கு மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். மேலும் ஹோட்டல்கள், பேக்கரிகள், காய்கறி, பழ கடைகள் என வணிக நிறுவனங்கள் 300 க்கு மேற்பட்டவை உள்ளன.
டவுன் பஞ்சாயத்தில் குப்பை சேகரிக்க, 80 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். தினசரி 10 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பையை தரம் பிரிக்காமல் கொடுப்பதால் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்கள் தரம் பிரித்து, கொண்டு செல்வது மிகவும் காலதாமதம் ஆகிறது. அதனால் குப்பையை வாங்கும், போது வீடு, வணிக நிறுவனத்தினர், அவர்களே, கண்ணாடி, பிளாஸ்டிக்பொருட்கள், பாலித்தீன் பை, உணவு கழிவு என தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து செயல்அலுவலர் திருநாவுக்கரசு கூறியதாவது, குப்பையை சேகரிக்கும் போது தரம் பிரித்து வாங்க வேண்டும் என தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களும் தரம் பிரித்து கொடுத்தால் மட்டுமே தூய்மை பணியாளர்கள் இன்று முதல் குப்பையை வாங்குவர். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் கொடுத்தால் வாங்கப்பட மாட்டாது எனவும், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.