/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜி.ஹெச்., முன் படுத்திருந்த ஓட்டல் தொழிலாளி சாவு
/
ஜி.ஹெச்., முன் படுத்திருந்த ஓட்டல் தொழிலாளி சாவு
ADDED : நவ 03, 2024 01:23 AM
ஜி.ஹெச்., முன் படுத்திருந்த
ஓட்டல் தொழிலாளி சாவு
குமாரபாளையம், நவ. 3-
குமாரபாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் குமார், 35; ஓட்டல் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில் காவேரி ஆற்றுக்கு தன் தந்தை செல்வமணியுடன் சென்றார். அப்போது, வலது காலில் கண்ணாடி குத்தி ரத்தம் வெளியேறியது. இதனால் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பின், மருத்துவமனைக்கு வெளியே குமார் படுத்துக்கொண்டார். தந்தை செல்வமணி வேலைக்கு சென்று விட்டார். மறுநாள் மொபைல் போனில், அனாதை சடலம் என தன் மகனின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, நேரில் சென்ற செல்வமணி, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மகனின் சடலத்தை பார்த்து உறுதி செய்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.