/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எடை குறைவான இரட்டையர் ஜி.ஹெச்., சிகிச்சையால் நலம்
/
எடை குறைவான இரட்டையர் ஜி.ஹெச்., சிகிச்சையால் நலம்
ADDED : நவ 13, 2024 07:29 AM
நாமக்கல்: பரமத்தி வேலுாரை சேர்ந்த தாமோதரன் மனைவி கோமதி. கோமதிக்கு கடந்த செப்., 2ல் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. 27 வாரங்களே ஆன நிலையில், குறை பிரசவத்தில் பிறந்ததால், ஒரு குழந்தை, 940 கிராம், மற்றொன்று, 680 கிராம் எடையிலும் இருந்தது.
இதனால் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் பிரச்னை இருந்தது. அடுத்த இரு நாளில், ஈரோடு அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயர் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இதனால் மூச்சு திணறல் சீராக, உடல் எடையும் அதிகரித்தது. ஒரு குழந்தை, 1.700 கிலோ, மற்றொன்று, 1.050 கிலோ எடையாக உயர்ந்தது. 69 நாள் சிகிச்சைக்கு பின், தாய்-மற்றும் சேய்கள், நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

