/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாய் கடித்து குதறிய சிறுமிக்கு தீவிர சிகிச்சை
/
நாய் கடித்து குதறிய சிறுமிக்கு தீவிர சிகிச்சை
ADDED : செப் 10, 2025 12:55 AM
ராசிபுரம், ராசிபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சீனிவாசன், 32; இவரது மனைவி வைத்தீஸ்வரி; தம்பதியரின் மகள் தியாசினி, 4. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு குழந்தை தியாசினி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று, சிறுமியை கடித்து குதறியது. இதில், குழந்தையின் காது துண்டாகியது. மேலும், கை, உடம்புகளிலும் காயம் ஏற்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், நாயை அடித்து விரட்டினர். காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை, தற்போது சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தை கட்சியின், 4வது வார்டு கவுன்சிலர் பழனிச்சாமி, ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், நகர் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.