/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிராக்டர் ரிவர்ஸ் எடுத்தபோது மோதிய விபத்தில் சிறுமி பலி
/
டிராக்டர் ரிவர்ஸ் எடுத்தபோது மோதிய விபத்தில் சிறுமி பலி
டிராக்டர் ரிவர்ஸ் எடுத்தபோது மோதிய விபத்தில் சிறுமி பலி
டிராக்டர் ரிவர்ஸ் எடுத்தபோது மோதிய விபத்தில் சிறுமி பலி
ADDED : செப் 07, 2025 12:47 AM
நாமக்கல், டிராக்டரை ரிவர்ஸ் எடுத்தபோது மோதிய விபத்தில், படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி நரிக்குறவர் புதுகாலனியை சேர்ந்த வேலன், நந்தினி தம்பதியர். இவர்களது மகள்கள் நிஷாந்தினி, 10, சிவசேனா, 8 மற்றும் 3 வயது மகன் கவின். இதில், சிவசேனா, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
சிறுமி சிவசேனா, கடந்த, 4ல், பக்கத்து தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மரத்தடியில் விளையாடி கொண்டிருந்தாள். அதே பகுதியை சேர்ந்த விஜய், 26, என்பவர், கோவில் அருகே நிறுத்தி வைத்திருந்த அவருக்கு சொந்தமான டிராக்டரை பின்னோக்கி இயக்கியுள்ளார்.
அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமி சிவசேனா மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த சிவசேனாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிவசேனா, நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு உயிரிழந்தார். நாமக்கல் போலீசார், தலைமறைவாக உள்ள டிராக்டர் டிரைவர் விஜயை தேடி வருகின்றனர்.